search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் இடைத்தேர்தல்"

    பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. #ImranKhan #pakistanbypolls
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். 

    அந்த வகையில் 11 பாராளுமன்றத் தொகுதிகள், பஞ்சாப் மாகாணத்தில் 11 சட்டசபை தொகுதிகள், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் 9 சட்டசபைதொகுதிகள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் தலா இரு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் 24 சட்டசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின. 
     
    இந்த தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியான நிலையில் பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    வெகுகுறிப்பாக, மூன்று பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான் ராஜினாமா செய்த இரு தொகுதிகளிலும் ஆளும்கட்சி வேட்பாளர்கள் தற்போது தோல்வியை சந்தித்துள்ளனர்.

    அவர் ராஜினாமா செய்த லாகூர் தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) வேட்பாளரும் முன்னாள் ரெயில்வே மந்திரியுமான காவ்ஜா சாட் ரபீக் வெற்றி பெற்றுள்ளார். பன்னு தொகுதியில் முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் வேட்பாளர் ஜாஹித் அக்ரம் துரானி வென்றுள்ளார்.

    கடந்த பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி தற்போது லாகூர் பாராளுமன்ற தொகுதியில் இம்ரான் கட்சி வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

    மாகாண சட்டசபைகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தொகுதிகளில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 11 இடங்களிலும், முன்னாள் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி 7 இடங்களிலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். #ImranKhan #pakistanbypolls
    பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். #PakistanByElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் அங்கு 11 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 மாகாணசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின.

    இந்த தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இடைத்தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளில் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.


    இன்றைய இடைத்தேர்தலுக்காக 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின்னர் ஒட்டுமொத்த முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

    பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanByElection
    ×